போட்டோஷாப் மென்பொருளுக்கு புதியவரா நீங்கள்.உங்களுக்கு அது புரியவில்லையா? அல்லது நீங்கள் போட்டோஷாப்பை எப்போதாவதுதான் பயன்படுத்துவீர்களா? அல்லது உங்களுடைய கணினியில் அதற்க்கான மெமரி பத்தவில்லையா? உங்களிடம் ஓரளவு வேகமான இணைய
இணைப்பு உள்ளதா கவலையை விடுங்கள்.உங்களுக்காகவே இருக்கின்றது ஒரு அருமையான இணையதளம்.
pixlr.com இந்த தளத்தில் போட்டோஷாப்பில் உள்ள ஒரு சில டூல்களை தவிர்த்து அனைத்து டூல்களையும் இணைத்துள்ளார்கள். இந்த தளத்தில் போட்டோவினை எடிட் செய்யும்போது போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தும் எண்ணம் தோன்றும்.இதி நீங்கள் உங்கள் கணினியில் உள்ள போட்டோக்களை அப்லோட் செய்து கூட எடிட் செய்யும் வசதி உள்ளது.
மேலும் போட்டோக்களுக்கு எஃபெக்ட்கள் கூட கொடுக்கலாம். போட்டோக்களை எடிட் செய்ய -> Open photo editor <- என்ற பகுதிக்கு செல்லுங்கள்.போட்டோவிற்க்கு எஃபெக்ட் கொடுக்க -> Retro vintage effects <- பகுதிக்கு செல்லுங்கள்.அவ்வளவுதான் நீங்கள் இப்போ போட்டோஷாப்பை உங்கள் கணினியில் பதியாமலேயே எடிட் செய்யலாம்.
இன்னும் எதற்கு வெய்ட் பண்றீங்க உடனே லிங்க்கை கிளிக் செய்யுங்க
Link For That Site : http://pixlr.com
Comments
Post a Comment