GOOGLE vs FACEBOOK

நான் அண்மையில் இணையத்தில் படித்த தகவல்

          இணைய ஜாம்பவனாக கூகுள் தளம் விளங்கி வருகிறது. கூகுள் பற்றிய முன்னுரை உங்களுக்கு அவசியமில்லை அதன் சிறப்பு நீங்கள் அனைவரும் அறிந்தது. எவ்வளோ பெரிய வல்லவனாக இருந்தாலும் அவனுக்கும் வல்லவன் வையகத்துள் உண்டு என்பது என்பது பழமொழி அதை மெய்பிக்கும் வகையில் கூகுள் வளர்ச்சியை தனது ஒரே சேவையின் மூலம் ஆட்டம் காண வைத்து விட்டது facebook.



          கூகுள் பல்வேறு தளங்கள் வசதிகள் வைத்து முன்னணிக்கு வருவதை ஒரே ஒரு சமூகத்தளமான facebook என்ற ஒன்றை வைத்தே கூகுள் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.
நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் facebook வளர்ச்சியைக் கண்டு கூகுள் மிரண்டு போய் நிற்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் மண்டை காய்ந்து போய் உள்ளது. facebook க்கை சமூகத்தளத்தின் மூலம் தான் சமாளிக்க முடியும் என்று Google Buzz என்ற வசதியைக் கொண்டு வந்தது ஆனால் அவசரத்தில் செய்வது எதுவும் உருப்படியாக இருக்காது என்பதற்கு உதாரணமாக ஆகி விட்டது. தங்கள் அனுமதி இல்லாமலே தங்களுடைய தொடர்புகளை மற்றவர்கள் பார்க்கும் படி செய்து விட்டது இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தன் தவறை தாமதமாக உணர்ந்த கூகுள் அதை சரி செய்தது. இருப்பினும் முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விட்டது அதன் பிறகு என்னனென்னவோ மாற்றங்கள் செய்தும் அது வரவேற்ப்பை பெறவில்லை.


இன்னொரு பிரச்சனை பயனாளர்கள் இது மின்னஞ்சலுடன் இணைந்து இருப்பதை விரும்பவில்லை தனித்தளமாக இருப்பதையே விரும்பினார்கள். Google Buzz ஜிமெயில் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதைப்போல ஆகி விட்டது. இது உண்மையிலேயே ரொம்ப மோசமான யோசனை இதை கூகுள் நிறுவனம் எப்படி அறியாமல் போனது என்று இன்னும் எனக்கு இருக்கும் ஒரு சந்தேகம்.


ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்தால் மட்டுமே இதைப்பயன்படுத்த முடியும் என்பதைப்போல இருந்தால் இதை எப்படி மற்ற மின்னஞ்சல் பயனாளர்கள் விரும்புவார்கள். ஒரு சிலருக்கு யாஹூ அல்லது ஹாட்மெயில் மட்டுமே பயன்படுத்த பிடிக்கும் அவர்களைப் போய் “நீ ஜிமெயில் ல் நுழைந்தால் தான் Google Buzz பயன்படுத்த முடியும் என்றால்.. போயா நீயும் உன் Google Buzz ம்” னுட்டு போய்டுவாங்க. கூகுள் பல்வேறு சிறப்பான வசதிகளை தந்தாலும் ஜிமெயில் சேவையை விரும்பாமல் மற்ற மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துபவர்கள் மில்லியன் கணக்கில் இருக்கிறார்கள்.


தற்போது Google Buzz குறைந்த அளவு பயனாளர்களால் மட்டும் பயன்படுத்தப்படுகிறது அதிலும் குறிப்பாக தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தங்கள் விவாதங்களை இதில் நடத்தி வருகிறார்கள் மற்றபடி யாரும் இதைப் பெருமளவில் பயன்படுத்துவதில்லை. எனவே கூகுள்க்கு தோல்வி அடைந்த தனது தயாரிப்புகளில் ஒன்றாக மாறி விட்டது. இது கூகுள்க்கு பலத்த அடியாகும்.


அவசரப்பட்டு இப்படி சொதப்பி விட்டோமே! என்று கவலையடைந்த கூகுள் தனது முயற்சியில் சற்றும் தளராது facebook போட்டியாக மாற்று சமூகத்தளத்தை ரகசியமாக உருவாக்கி வருவதாக செய்திகளில் வந்து கொண்டு இருந்தது அதற்க்கு Google Me என்ற பெயரும் உள்ளதாக இணையம் முழுவதும் பேசப்பட்டு வந்தது. இதில் பெயரில் மட்டும் மாற்றம் மற்றபடி புதிய சமூகத்தளத்தை உருவாக்கி வருவது உண்மை தான் பெயர் Google Me அல்ல Google + ஆகும். தற்போது அதிகாரப்பூர்வமாக இதை கூகுள் அறிவித்து இருக்கிறது.

Circle

இதில் Circle எனப்படும் வசதி சிறப்பாக உள்ளது அதாவது facebook ல் குழு என்ற வசதி இதைப்போலவே இருந்தாலும் அதை விட இதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய வசதிக்கு ஏற்ப நமது நண்பர்களை Drag and Drop முறையில் எளிதாக மாற்றி அமைக்க முடியும். இதனால் நமது Staus Message பிரித்துக்காட்ட முடியும்.
எடுத்துக்காட்டாக facebook ல் நாம் ஒரு செய்தியை போடுகிறோம் அதை நம்முடன் இணைந்துள்ள அனைவருமே பார்க்க முடியும் குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்க அதற்க்கு குழு (Group) உருவாக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் தேவைப்படும் நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் Circle என்ற முறையில் நண்பர்களை பிரித்து இருப்பதால் நாம் status message அப்டேட் செய்யும் போதே யார் யார் பார்க்கலாம் என்று முடிவு செய்ய முடியும். இதன் மூலம் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. இது facebook போல இருந்தாலும் அதை விட சிறப்பாக புதிய வசதிகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

Hangouts and Photos

க்ரூப் வீடியோ சாட் தான் Hangouts என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இரு மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் குழுவாக பேசிக்கொள்ள முடியும். இதன் சிறப்பு யார் தற்போது பேசிக்கொண்டு இருக்கிறார்களோ அவரது முகம் முன்னிலைப்படுத்தப்படும் இதனால் அவர் பேசுவதை நாம் தடங்கல் இல்லாமல் பார்க்க முடியும்.

இது வழக்கமான கூகுள் பிக்காசா பட வசதி போன்றது தான் இதில் நமது படங்களை எடிட் செய்ய முடியும். நமது விருப்பப்படி படங்களை பிரித்து வரிசைப்படுத்தலாம்.

Stream and Sparks

இது கிட்டத்தட்ட Google Buzz வசதிபோலத்தான். நண்பர்களிடையே எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள உதவும் ஒரு வசதி.

Mobile

இதில் Huddle, Location, Instant Upload என்ற வசதிகள் உள்ளது. இதில் பெரும்பாலான வசதிகள் facebook லேயே இருப்பதால் இதில் உள்ள வசதிகள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. இதை கூகுள் கொஞ்சம் மேம்படுத்திக் கொடுக்கிறது. இது கூகுள் Android மற்றும் iPhone க்கு ஏற்றவாறு மென்பொருளையும் (Apps) வடிவமைத்துள்ளது.


கூகுள் நிறுவனத்தின் பெரிய வருமானமே விளம்பரங்கள் தான். facebook வந்த பிறகு இதன் வருமானத்தில் பாதிப்பு ஏற்ப்பட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்த மே மாத நிலவரப்படி கூகுள் தளங்களுக்கு 180 மில்லியன் மக்கள் வந்து சென்று இருக்கிறார்கள் இதில் YouTube தளமும் சேர்த்து. facebook தளத்தை 157.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டு இருக்கிறார்கள். facebook தளத்தில் 103 பில்லியன் பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன சராசரியாக 375 நிமிடங்கள் இதே கூகுள் விசயத்தில் 46.3 பில்லியன் பக்கங்கள் சராசரி நேரம் 231 நிமிடங்கள் மட்டுமே. இதனால் விளம்பரதாரர்கள் பார்வை facebook பக்கம் திரும்பி இருக்கிறது. எப்போதுமே ஒரு தளத்தில் Page Views ரொம்ப முக்கியம். இப்போ புரியுதா ஏன் கூகுள் facebook ஐ பார்த்து பயப்படுகிறது என்று
கூகுள்க்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான். இதிலும் தோல்வி அடைந்தால் சமூகத்தளத்தில் முன்னணிக்கு வரும் ஆசையை மூட்டைக்கட்டி வைத்து விட்டு தனது மற்ற தளங்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது தான். இதை நம்மை விட கூகுள் நன்கு உணர்ந்து இருக்கும் அதனால் உஷாராக இருக்கும். Google Buzz வெளியிட்ட போது கூகுள் நிறுவன ஊழியர்கள் மட்டுமே இதை சோதனை செய்து வெளியிட்டார்கள் அதனால் பல பிரச்சனைகளை கூகுள் சந்திக்க நேரிட்டது.
இந்த முறை பயனாளர்கள் சிலருக்கும் இதை பயன்படுத்த அனுமதி அளித்து அவர்களின் நிறை குறைகளைக் கேட்டு மாற்றம் செய்து பின்னரே வெளியிடும். தற்போது இந்த வசதி சோதனை அடிப்படையிலேயே இருக்கிறது முழுப்பயன்பாட்டிற்க்கு வர நீண்ட நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன் காரணம் முன்பு வாங்கிய அடி பலமானது. இதை நீங்கள் பயன்படுத்தி பார்க்க விரும்பினால் வழக்கம் போல கூகுள் அழைப்பிதல் முறையில் அனுமதிக்கிறது அதாவது ஏற்கனவே அனுமதி பெற்ற ஒருவர் உங்களுக்கு இதைப் பயன்படுத்த அழைப்பிதல் அனுப்பினால் முயற்சிக்கலாம் இல்லை என்றால் https://plus.google.com/ தளம் சென்று உங்களுக்கு அழைப்பு அனுப்பக்கூறி உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யலாம் ஆனால் இதன் மூலம் கிடைப்பது மிக மிகக் கடினம். இலவசம் தானே அதனால் சும்மா போட்டு வைங்க!

கூகுள் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஏதாகினும் கூகுளின் பரம ரசிகன் என்ற முறையில் Google + வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Comments